இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 27
பேருடன் 5 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
தபால் அலுவலம் முன்பாக நேற்று புதன்கிழமை மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம்,
ராமேசுவரத்தில் 750இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்நிலையில், இவர்களில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினர்
இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுத்தி இராமேஸ்வரம் வரம்
மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக நடைபெற்றது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரம் தபால் அலுவலகம் முன்பு அனைத்து
விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல நூறு பேர் பங்கேற்றனர்.