இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஐராவத்’ போர்க் கப்பல் நேற்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினரால்
குறித்த கப்பல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டது.
ஐராவத் கப்பல் கப்டன் ரிந்து பாபு மற்றும் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும் நேற்று மேற்கு
கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும் , ‘ ஐஎன்எஸ் ஐராவத்’ என்ற கப்பலானது, நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் கூட்டுபயிற்சியில் ஈடுபடவுள்ளது. பயிற்சிகள் நிறைவடைந்த பின்
னர் நாளை வெள்ளிக்கிழமை கப்பல் மீண்டும் இந்தியா நோக்கி பயணமாகவுள்ளது.