அவுஸ்திரேலியாவில் சர்சைக்கு உள்ளாகி கைதாகி பின்னர் விடுதலையாகிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்றிருந்த தனுஷ்க குணத்திலக்க பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார்.
இதனையடுத்து அவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
விசாரணைகள் நிறைவடையும் வரையில் தனுஷ்க குணத்திலக்கவுக்கு கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டது.
பின்னர், அவர் சுமார் 11 மாதங்கள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அவர் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய சிட்னி நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
அதன்பின்னர் தனுஷ்க குணத்திலக்க அண்மையில் நாடு திரும்பினார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான கிரிக்கெட் தடை நீக்கப்பட வேண்டும் என சுயாதீன விசாரணை குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது.