போர் தீவிரமாக நடைபெற்றுவரும் காசாவின் வடபகுதியிலிருந்து 27 இலங்கையர்கள் தென் பகுதி நோக்கி செல்கின்றனர் என இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நிமால்பண்டார தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள ஏனையவர்களுடன் இவர்கள் எகிப்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது காசாவின் வடபகுதியில் வசிப்பவர்கள் தெற்குநோக்கி செல்கின்றனர் இவர்களில் 27 இலங்கையர்களும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்திய அதிகாரிகள் திறந்துள்ள பாதை வழி வழியாக இவர்கள் எகிப்திற்கு செல்லவுள்ளனர் எனவும் நிமால்பண்டார தெரிவித்துள்ளார்.
ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் உட்பட 36 நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு செஞ்சிலுவை சங்கம் தொடர்ந்தும் ஹமாசிடம் வேண்டுகோள் விடுத்துவருகின்றது காணாமல்போன இலங்கையர்கள் ஹமாசிடம் சிக்குண்டுள்ளனரா என்பது குறித்த விபரங்கள் விரைவில் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளேன் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.