இறுதிப் போர் தொடர்பில் விசேட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாம்!

editor 2

ஜெனிவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமைகள் மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர் குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் நோக்கிலும் விசேட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

இந்த விசேட அறிக்கை, நாட்டில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது என்பதை விளக்கும் என்று கூறிய அவர்,

அந்த விசேட அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடம் வழங்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய மேற்பார்வை குழுவின் தலைவராகவும் பதவி வகிக்கும் வீரசேகர கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே
இதனைத் தெரிவித்தார்.

மேலும், ‘ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நாட்டு
மக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும்.

மேலும், முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமாகின்றது.

பௌதிக பாதுகாப்பு மாத்திரமன்றி பொருளாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு ஆகியவையும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் சுமார் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். முப்பது ஆண்டுகாலப் போரில் சுமார் 29 ஆயிரம் பேரே இறந்தனர். தற்போது, நாட்டில் வீதி விபத்துகள் அதிகமாக இடம்பெறுகின்றன.’ – என்றார்.

Share This Article