வாக்குமூலம் வழங்குவதற்காக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று அனுமதி வழங்கியிருந்தார்.
அத்துடன், இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, இன்று முற்பகல் ரமித் ரம்புக்வெல்ல கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.