இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு படகில் பயணிப்பவர்களில் முதல் பயணத்தில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட படகு சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
நாகையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நடைபெறும் முதலாவது பயணத்தில் பங்கேற்பவர்களுக்கு 75% சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,
நாகபட்டினத்திலிருந்து பயணம் மேற்கொள்ள பயண கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ 6500 + 18 % ஜிஎஸ்டி வரியோடு ரூ.7670 (இந்திய ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள நிலையில், துவக்க விழாவை முன்னிட்டு 75% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி ஒக்டோபர் 14ஆம் திகதி அன்று ஒருநாள் மட்டும் 2375 +18 % வரியுடன் நபர் ஒன்றுக்கு ரூ 2803 (இந்திய ரூபாய்) பயண கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 30 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் சலுகை விலை அறிவிப்பால் கூடுதலாக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்று தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.