கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்!

editor 2

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) என்ற கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

குறித்த கப்பல் 103 மீற்றர் நீளமானது.

இந்த கப்பல் 24 பேர் கொண்ட பணிக்குழாமினருடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், அதன் பணிக்குழாமினர் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் என்ற கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.

Share This Article