யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
அண்மைய நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இணைய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி, யாழ். நகரில் உள்ள வீதி வழியாக வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்து நிறைவுபெற்றது.