யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் தென்னிந்தியாவின் பிரபல திரையிசைப் பாடகர் ஹரிகரன் பங்கேற்கவுள்ளதாக தென்னிந்திய திரைத்துறை நடன இயக்குநர் கலாமாஸ்டர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி யாழ்.முற்றவெளி மைதானத்தில் குறித்த இசை நிகழ்வு நடைபெறும் என்றும் அந்த நிகழ்ச்சி முற்று முழுதாக இலவசமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.