பெற்றோலியக் கூட்டுத்தாபனம், LIOC நிறுவனங்களும் விலை அதிகரிப்பை அறிவித்தன!

editor 2

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

அதன் அடிப்படையில்,

ஒக்டைன் 92 ரக பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 04 ரூபாவால் அதிகரித்து 365 ரூபாவாக விற்கப்படும்.

ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 03 ரூபாவால் அதிகரித்து 420 ரூபாவாக விற்கப்படும்.

ஓட்டோ டீசல் 10ரூபாவால் அதிகரித்து 351 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 62 ரூபாவினால் அதிகரித்து 421 ரூபாவாகவும் மண்ணெண்ணை 11 ரூபாவால் அதிகரித்து 242 ரூபாவாகவும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே விலை அதிகரிப்பை தாமும் மேற்கொள்ளவுள்ளதாக லங்கா ஐ ஓ சீ நிறுவனமும் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

Share This Article