எரிபொருள் விலை அதிகரிப்பு!

editor 2

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

குறித்த விலை மாற்றம் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சினோபெக் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 348 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 417 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

எனினும், ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article