இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வருகையில் தொழில்நுட்ப துறையினர் சிவில் சமூகத்தினர் மற்றும் பலதரப்பட்ட நிபுணர்களின் கருத்தினை உள்வாங்குவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
என குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர் இது அடிப்படை உரிமை அதுபேச்சுவார்த்தைகளிற்கு அப்பாற்பட்ட விடயம் அதனை பாதுகாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் குறித்தும் அமெரிக்க தூதுவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்கள் ஏனைய ஜனநாயக நாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளிற்கு ஏற்ப மாற்றியமைப்பது குறித்த தனது வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வலுவான சட்டமூலம் மூலம் சரியான சமநிலையை பேணுவது சட்டபூர்வமான ஒன்றுகூடலிற்கு அனுமதிப்பது சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் அச்சுறுத்தல்களை வலுவான விதத்தில் கையாளக்கூடிய விதத்தில் அவர்களை வலுப்படுத்துவது ஆகியவை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.