வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
பிற்பகல் 2:45 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று பின்னர் அங்கிருந்து பக்தர்கள் புடைசூழ சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்து சமுத்திரத்திலே வல்லிபுரத்து ஆழ்வாருக்கான தீர்த்தமாடுதல் இடம்பெற்றது.
கடந்த 14/09/2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வல்லிபுரத்து ஆழ்வார் திருவிழாவின் 16ம் நாளா இன்று புரட்டாதி பௌர்ணமியிலே தீர்த்த உற்சவம் இடம் பெறுவது வழமையாகும்.
இன்றைய வல்லிபுரத்து அழ்வார் சமுத்திர தீர்த்த உற்சவத்திற்கு வடமராட்சி, யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் அடியார்கள் சுமர் இரண்டு இலட்சம் வரையானோர் வருகை தந்திருந்தனர்.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் திருவிழாவில் சிறப்பு பூசைகளை மேற்கொண்டனர்.
இலங்கை போக்குவரத்து சபை, வடமராட்சி தனியார் போக்குவரத்து சேவை என்பன அடியவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கியிருந்தன.
இதே போன்று பருத்தித்துறை பொலிஸார், இலங்கை முதலுதவி சங்கத்தினர், இந்து சமய தொண்டர் சபை, சாரணர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர், முதலுதவி மற்றும் ஒழுங்குபடுத்தல் சேவைகளை வழங்கினர்.