யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 800 பேருக்கு எதிராகவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன் தினம் முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மாவட்டசெயலர் , பொலிஸார் உள்ளிட்டோர் நடத்திய சந்திப்பின்போதே பொலிஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.