தாழமுக்கம்; வடக்கு,கிழக்கில் ஒரு வாரத்துக்கு மழை!

editor 2

எதிர்வரும் 29ஆம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வானிலை அவதானி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 29.09.2023 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக நாளை முதல் (27.09.2023) எதிர்வரும் 02.10.2023 திங்கட்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நாட்டின் பல பகுதிகளும் இந்த தாழமுக்கத்தினால் மழை பெறும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 29.09.2023 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.


Share This Article