புதிய 02 பயங்கரமான சட்டங்கள் தொடர்பில் பீரிஸ் எச்சரிக்கை!

editor 2

அரசாங்கம் அண்மையில் கொண்டுவந்த இணையத்தள பாதுகாப்பு சட்ட மூலம் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் அது மிகவும் பயங்கரமான சட்டமூலம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்களின் எதிர்ப்புகளை அடக்க அரசாங்கம் பல்வேறு சட்டங்களை கொண்டு வருகின்றது.

உத்தேச இணையத்தள பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படவுள்ள ஆணைக்குழுவின் 5 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார்.

இதனால், அவர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு பொறுப்புக்கூற மாட்டார்கள். அவர்களுக்கு தேவ அதிகாரம் கிடைக்கும்.

அரசாங்கம் கொண்டு வந்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணையத்தள பாதுகாப்பு சட்டம் என்பன நிறைவேற்றப்பட்டால், அரசியல், பொருளாதார, சமூக ரீதியான பலபிரச்னைகளை எதிர்நோக்க நேரிடும்.

இந்த இரண்டு சட்டமூலங்களும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர், அவற்றை உயர் நீதின்றத்தில் சவாலுக்கு உட்படுத்த எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன – என்றார்.

Share This Article