இலங்கையிலிருந்து ஏதிலிகள் இருவர் தமிழகம் சென்றனர்!

editor 2

இலங்கையில் இருந்து மேலும் இருவர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

அரிச்சல்முனை கடற்பகுதியில் வைத்து அவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த இருவரும் மன்னார் மற்றும் மல்வானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 62 மற்றும் 64 வயதுகளையுடையவர்களாவர்.

படகு பயணத்திற்காக குறித்த இருவரும் தலா 50 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் மண்டபம் ஏதிலிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

Share This Article