இலங்கையில் நிபா வைரஸ்?

editor 2

பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டுக்கள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. எனவே, இந்த வைரஸ் தெரிந்தோ தெரியாமல் நாட்டுக்குள் தற்போது நுழைந்திருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்கு துறைமுகத்தில் அல்லது விமான நிலையத்தில் எந்த வகையிலும் பாதுகாப்பு நடைவடிக்கைகளும் எடுக்கவில்லை.
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் பலர் நாட்டுக்குள் வந்திருக்கலாம்.
கடற்றொழிலில் ஈடுபடும் பிரஜைகளுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்கின்றார்கள், பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்கின்றார்கள், போதை பொருள் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இதுவரையில் நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழைந்திருக்கலாம், நுழையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

வைரஸ் நாட்டில் இல்லை என யாரும் நினைக்க வேண்டாம்.

ஏற்கனவே பரவியிருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. நிபா வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு பரிசோதனை முறையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – என்றும் அவர் கூறினார்.

Share This Article