‘ஐயோரா’ என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.
2023-2025 காலப்பகுதிக்கான தலைமை பதவியை இலங்கை வகிப்பதால் இம்முறை ‘ஐயோரா’ மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டு மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றதுடன், இதில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றிருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்த மாநாட்டில் கலந்துகொள்வது இறுதி தருணத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவரும் பின்புலத்தில்’அயோரா’ மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது.
இது சர்வதேச ரீதியில் பெரும் அவதானம் மிக்க மாநாடாக மாறியுள்ளது.
பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் பங்கேற்பாரா இல்லையா என்பதுதான் தற்போது எழுந்துள்ள சிக்கல்.
அவர் மாநாட்டில் பங்கேற்பதை அவரது அலுவலகம் உறுதி செய்திருந்தாலும், உருவாகி வரும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அவரது இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் சீன சார்பு கொள்கை காரணமாக இந்தியா சில அரசியல் நெருக்கடிகளை இலங்கைக்கு கொடுத்து வருகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜ் நாத்சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக் கப்பட்ட இந்திய வெளியுறவு செயலகம் அறிவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கையில் அயோரா மாநாட்டில் பங்கேற்பது நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.