கனேடிய பிரஜைகளுக்கு விசா வழங்குவதை மறுஅறிவித்தல் வரை இந்தியா இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய பிரஜைகளின் விசா விண்ணப்பங்களின், ஆரம்ப ஆய்வு பணியில் ஈடுபடுகின்ற BLS இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
காலிஸ்தான் அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரச அதிகாரிகளை தொடர்புப்படுத்தும் ‘நம்பகமான குற்றச்சாட்டுகள்’ தங்களிடம் இருப்பதாக கனடா அறிவித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.