திருகோணமலையில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் மீள விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது அவர்களை எதிர்வரும் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.