நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குறைந்தது மாதாந்தம் 63 ஆயிரத்து 912 ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஜூலை மாதத்துக்கான மாதாந்திர வறுமைக் கோட்டு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு நபர் தனது குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யரூ. 15 ஆயிரத்து 978 தேவை.
கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்தத் தொகை ரூ. 17,352 ஆகும். மொனராகலை மாவட்டத்தில் மிகக்குறைந்த வாழ்க்கைச் செலவு பதிவாகியுள்ளதுடன் அதன் பெறுமதி ரூ. 15,278 ஆகும் .
ஜூலை 2023 இல் மேற் கொண்ட புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாத செலவு ரூ. 63,912 ஆகும்.