விசாரணைக்குழு நியமனம் வீண் செயல் – பேராயர்!

editor 2

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுக்களை நியமிப்பதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களைப் போன்று வீண் செயல் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்ஆண்டகை தெரிவித்துள்ளார்.

களுத்துறை புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான தரப்பினர் உயர் பதவிகளில் இருக்கும் போது எவ்வாறு சுயாதீன விசாரணைகளை நடத்த முடியும்? சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு மிகவும் பாரதூரமான பொறுப்பு இருப்பதாக தெரிவுக்குழுவில் அறிக்கையின் 134 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டு மென கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவர்கள் இன்னும் உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்த நிலையில், மேலும் குழுக்களை நியமிப்பதில் என்ன பயன்-என்றார்.

Share This Article