இலங்கையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பு!

editor 2

உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தைவிட கணிசமாக உயர்ந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளபோதிலும், தனியார் வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படாமையால் மீண்டும் வாகனங்களின் விலைகள் உயர்வடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலைமை தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த மாதம் முதல் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

வாகனங்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக அமுல் உள்ளது. என்றாலும், தற்போது பொது போக்குவரத்துக்கான வாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

எரிபொருளுக்கான கியூ. ஆர் முறை கடந்த முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

குறிப்பாக கார்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இவ்வாறு விலைகள் அதிகரித்து வருவதாக வானக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

Share This Article