ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு அமைச்சு பதவியை தருவதற்காக பல தடவைகள் அழைப்பு விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை ஏற்கத்தான் தயாராக இல்லை என பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் தான் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக சிலர் கூறினாலும் அமைச்சு பதவியை ஏற்கத்தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.