இலங்கையின் தென் பகுதியில் ஆசிரியர் ஒருவரால் 07 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் சுமார் 8 மாதங்களின் பின்னர் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த 7 வயது மாணவி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பரிசோதனைகளில் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்பதோடு அவரின் மனைவி பாலர் பாடசாலை ஆசிரியையாவார்.
சந்தேகநபர் 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்துவதோடு , அவரது மனைவி முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்பினை நடத்துகின்றார்.
இவர்கள் இருவர் தமது வீட்டிலேயே மேலதிக வகுப்புக் களை நடத்தியுள்ளனர்.
கணவன் வீட்டிற்குள் காணப்படும் அறையொன் றிலும் , மனைவி வீட்டிற்கு வெளியிலும் வகுப்புக்களை நடத்தியுள்ளனர். இவ்வாறானதொரு சூழலிலேயே சிறுமி குறித்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் ரீதியான மாற்றங்களை அவதானித்தஅவரது தாயார்,
றுமியை மருத்துவ சிகிச்சைக்க்காக அழைத்து சென்ற போதே தனது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியமையை அறிந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அவரது பெற்றோர் முன்வரவில்லை. காரணம் சமூகம் தொடர்பான அச்சமும் அதனால் ஏற்படக்கூடிய அவமானமும் அவர்களை முற்போக்காக சிந்திக்க இடமளிக்கவில்லை.
இதனால் அந்த பெற்றோர் அங்கிருந்து இடம்பெயர்ந்து பிறிதொரு பிரதேசத்தில் குடியமர்ந்ததோடு அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையில் தனது மகளை சேர்த்துள்ளனர்.
குறித்த சிறுமியை முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ள போதிலும் அவர்கள் மகளின் எதிர்காலம் கருதி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரியவருகிறது.
எவ்வாறிருப்பினும் கடந்த ஓகஸ்ட்மாதம் குறித்த சிறுமி சுகயீனமடைந்ததையடுத்து ,
அவரின் தாயார் அவரை அருகிலுள்ள ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி எய்ட்ஸ் (எச்.ஐ.வி.) தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் பெற்றோரிடம் மேலதிக தகவல்களைக்கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
மருத்துவர்களின் முறைப்பாட்டுக்கமைய கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டு 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.