முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு உடையார்க்கட்டு பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில்,
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை மறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.