இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேயின் சேவை நீடிப்பு டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க ஒக்ரோபர் 13ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்கவின் சேவையை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும், விக்கும் லியனகேயுக்குப் பின்னர் அவரை இராணுவத் தளபதியாக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும் அரசாங்கத் தகவல்கள் மேலும் கூறின.
அவர் எந்தவித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாததும், தனது சேவைக் காலத்தில் ஒழுக்க மீறல்களில் ஈடுபடாததும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சஞ்சய் வனசிங்க, தற்போது இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதுடன், இவர்முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹமில்டன் வணசிங்கவின் மூத்த மகனும் ஆவார்.