எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிரிந்திஓயா வேலைத்திட்டத்தின் தெற்கு கால்வாயை புனரமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதை தவிர்க்கவுள்ளதாக சிலர் பொய் பிரசாரம் செய்து வருவது கவலையளிப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு தம்மை தோற்கடிக்க பலர் சதி செய்ததாக தெரிவித்த அவர், எவருக்கும் அஞ்சாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிரிந்திஓயா திட்டம் மாத்திரமன்றி நாட்டின் விவசாயத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் அபிவிருத்தி செய்து நெல்லுக்கான நிலையான விலை சூத்திரத்தை கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.