ஆவணப்படம் வெளியிடுகிறது சனல் 4!

editor 2

நாட்டில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய ஆவணப்படத்தை பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட போவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆவணப்படம் நாளை செவ்வாய்க்கிழமைவெளியாகும் என்று அந்தத் தொலைக் காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் (Sri Lanka’s Easter Bombings) என்ற பெயரில் இந்த ஆவணப்படம் வெளியாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தும் அரசாங்கத்தின் தகவல்களை அம்பலப்படுத்துவோரால் முன்வைக்கப்பட்ட புதிய தகவல்களின் வெளிச்சமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது என்றும் அந்த சனல் 4 தெரிவித்துள்ளது.

Share This Article