கோதுமை மா இறக்குமதி வரி அதிகரிப்பு!

editor 2

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (30) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியும் கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன்,கோதுமைக்காக 6 ரூபா வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எனவே கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், இறக்குமதி கட்டுப்பாட்டை மாத்திரமே இதன் மூலம் உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்

Share This Article