குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமையை இலகுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மற்றும் அதன் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வருகை வீஸா, வதிவிட வீஸா மற்றும் போக்குவரத்து வீஸா என மூன்று வகையான வீஸாக்களை வழங்குகிறது.
வருகை வீஸா மற்றும் வதிவிட வீஸா ஆகிய இரண்டு வகையான வீஸாக்களின் கீழ் வழங்கப்படும் வீஸா வகைகளில் தற்போதுள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அதிக வெளிநாட்டு ஈர்ப்பு உள்ள நாடுகளில் செயல்படுத்தப்படும் விஸா முறைகளை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அரசாங்கம் கூறுகிறது.
இதனால் விஸாமுறையை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள விஸா முறையை எளிமையாக்கும் வகையில் பொது பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது