இன்று இரவு சுப்பர் மூன் நீல நிலவு!

editor 2

முழுநிலவு இன்றைய தினம் சுப்பர் மூன் மற்றும் நீல நிலவாக இருக்கும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நிலவு அந்த சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது வழக்கத்தை விட 14 வீதம் பெரியதாகவும் 30 வீதம் பிரகாசமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்நிலைசுப்பர் மூன் என்று அழைக்கப்படுகின்றது.
நாளை காலை 7.05 மணி வரை சந்திரன் பூமிக்கு மிக அருகில் 3 இலட்சத்து 57 ஆயிரத்து 344 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும்.

2025 நவம்பர் வரை அது பூமிக்கு நெருக்கமாக வராது. சந்திரனின் நீள்வட்ட சுற்றுப் பாதை காரண மாக முழுமதி நாட்களில் நிலவின் அளவும் பிரகாசமும் மாதத்துக்கு மாதம் மாறுபடும். இன்றைய முழுமதி பூமியை 50 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் நெருங்கி வருகின்றது. ஒரே மாதத்தில் இரு நிலவு கள் தோன்றும்போது இரண்டாவது
முழுநிலவு நீல நிலவு என அழைக்கப் படுகிறது.

ஆனால், இது உண்மையில் நீல நிறத்தில் தோன்றுவதில்லை. கிழக்கு வானத்தில் சூரியன் மறைந்த பிறகு இன்று மாலை முதல் முழுநிலவை மேற்கு வானில் காண முடியும். எனினும், சுப்பர் நீல நிலவை காண சிறந்த நேரம் சூரிய உதயத்துக்கு – அதாவது நாளை வியாழக்கிழமை அதிகாலையாகும்.

இந்த நாட்களில் எதிர்நிலையில் இருக்கும் பிரகாசமான சனிக் கிரகம் சந்திரனுக்கு மிக அருகாகத் தெரியும். இந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்த சுப்பர் நீல நிலவுக்காக 2037 ஜனவரி மற்றும் மார்ச் வரை காத்திருக்க வேண்டும் என் றும் அவர் கூறினார்.

Share This Article