புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் – வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல்!

editor 2

தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பிரிவுகள் தொடர்பாக பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களைக் கருத்தில் கொண்டு அந்த சட்டமூலத்திற்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்தில் குறித்த திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Share This Article