நாட்டில் நிலவும் வறட்சியினால் 18 மாவட்டங்களில் 84 ஆயிரத்து 681 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 91 ஆயிரத்து 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வடக்கு மாகாணத்தில் 23 ஆயிரத்து 688 குடும்பங்களை சேர்ந்த 75 ஆயிரத்து 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 991 குடும்பங்களை சேர்ந்த 63 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த மாகாணத்தில் ஓடைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அந்தப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மத்திய மாகாணத்தில், 9 ஆயிரத்து 697 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 695 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களை சேர்ந்த 62 ஆயிரத்து 253 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.