இன்று தொடக்கம் செப்ரெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு அண்மித்த அட்சர ரேகைகளுக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று நண்பகல் 12.11 மணிக்கு கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகுதிகளுக்கு ‘வெப்ப சுட்டெண் ஆலோசனை’ வெளியிட்டுள்ளது.
வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்ட சுட்டெண்ணின் படி, ‘எச்சரிக்கை’ நிலை என்பது நீண்ட கால வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளால் சோர்வு சாத்தியமாகும். மேலும் வெப்பத்தினால் தசை பிடிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
அதன்படி, வெளியில் வேலை செய்வதை கட்டுப்படுத்தவும், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனிக்கவும், குழந்தைகளை வாகனங்களில் கவனிக்காமல் விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், அதிக நீர்பருகவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து, அதிக நீர் பருகவும் பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை யுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்க்கப்படுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.