ராஜபக்சக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது – மிலிந்த!

editor 2

ராஜபக்சக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி காணப்படுகின்ற போதிலும் 2024 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சாக்களுக்கு போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என மிலிந்தமொரகொட தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு தற்போதைய அரசாங்கத்தில் ராஜபக்சாக்களின் பிரதிநிதித்துவம் உள்ளது அரசாங்கத்தில் ராஜபக்சாக்களின் குடும்பத்தவர்கள் பலர் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article