நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை!

editor 2

ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி,கல்வி முறையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்றுஅவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரச ஊழியர்கள் 5 வருட காலம் விடுமுறை பெற்று உள் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ வேலைக்குச் செல்லலாம் என அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்ததாகவும் இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மூளையில்லா அரசாங்கத்தாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பது பிரச்னை – என்றும் அவர் கூறினார்.

Share This Article