நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும் – சம்பிக்க எச்சரிக்கை!

editor 2

‘நாட்டின் பொருளாதரம் மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும். 90 பில்லியன் டொலர்களாக இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது 80 பில்லியனை விடவும் குறைந்துள்ளது.
இதனால், நாடு படிப்படியாக பின்நோக்கி செல்லும். பொய்யான பொருளாதார இலக்கங்களை கூறும் வாய் பேச்சு வீரர்கள் மீண்டும் வரலாம்.’-இவ்வாறு எச்சரித்துள்ளார் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.5 வீதமாக குறைந்துள்ளது. இது மிகவும் பயங்கரமான நிலைமை.நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மகிந்த அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்ததாக 2019 ஆம் ஆண்டுஜனாதிபதித் தேர்தலின் போது, நிபுணர்கள் என்று கூறிக்கொண்டவியத் மக அமைப்பில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

7 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3 வீதமாக குறைத்ததாக கூறினர்.
கோட்டாபயவை கொண்டுவந்து மீண்டும் 7 வீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்றும் கூறினர். இதுவே அவர்கள் நாட்டு மக்களை ஏமாற்ற நாடு முழுவதும் முன்னெடுத்த பிரசாரம். இறுதியில் என்ன நடந்துள்ளது. 7 வீத பொருளாதார வளர்ச்சியும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இருந்த 3 வீத பொருளாதார வளர்ச்சி வேகம் கூட மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் இருக்கவில்லை.

11.5 என்ற எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி வேகமே இருந்துள்ளது.

பொய்யான பொருளாதார இலக்கங்களை கூறும் வாய் பேச்சு வீரர்கள் மீண்டும் வரலாம்.
எந்த வேலைகளையும் செய்யாத, முன்னேற்றங்களை காண்பிக்காதவர்கள் பொருளாதார விற்பன்னர்கள் போல் வந்து உரைகளை நிகழ்த்தலாம்.

இது குறித்து கவனமாக இருக்குமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம்-என்றார்.

Share This Article