நாட்டில் 3 ஆயிரத்தும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

editor 2

நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில், 600இற்கும் அதிகமான பற்றாக்குறை விசேட மருத்துவ நிபுணர்களுக்கு நிலவுகிறது. இதனால், சில மருத்துவமனைகளின் செயல்பாடுகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் மருத்துவர்கள் சேவையில் இணைக்கப்படுவர். இதன்மூலம் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு நிலவும் பற்றாக்குறை ஓரளவு நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், விசேட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையால் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவது கடினமானது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Share This Article