சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த விண் ஓடம் தற்போது சந்திரனை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விண் ஓடம் அடுத்த செயல்பாடு நாளை மறுதினம் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லேண்டரின் 4 இயந்திரங்களில் 2 இயந்திரங்கள் இயக்கப்பட்டு அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி அதனை சந்திரனில் தரையிறக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.