இராணுவத்தினர், பொலிஸாரின் பிரசன்னத்துடன் பெருமளவான சிங்கள பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் வருகைதந்திருந்த நிலையில் இந்துக்கள் கூடி குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டினை மேற்கொள்வதற்கு பொலிஸாரும் சிங்கள ஆதரவான சில தமிழர்களும் இணைந்து நீதிமன்றில் தடை உத்தரவைக் கோரியிருந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்க மறுத்ததுடன் வழிபாட்டில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் வடக்கின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்களும் அரசியல் பிரமுகர்களும் குருந்தூர் மலைக்குச் சென்று பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே,
குழந்தைகள், சிறுவர்கள் உள்ளடங்கலாக சிங்களவர்கள் பல பேருந்துகளில் குருந்தூர் மலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதேவேளை,
குருந்தூர் மலை வீதிகளில் பயணிக்கும் மக்கள் பொலிஸாரின் சோதனைக் கெடுப்பிடிகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.
சிங்கள பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் திரண்டுள்ள சூழலில் அங்கு ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன் உட்பட்டவர்களும் அங்கு கூடியுள்ளனர் என்று எமது விசேட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.