வறட்சியால் வடக்கில் 75 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு!

editor 2

வறட்சி காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 75 ஆயிரத்து 287 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 70 ஆயிரத்து 238 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 90 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விசேடமாக, 15 மாவட்டங்களில் உள்ள 52 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் வறட்சியான காலநிலையினால் ஏற்பட்ட குடிதண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share This Article