க.பொ.த பரீட்சையை பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராய்வு!

editor 2

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதனூடாக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் வாய்ப்பை பெறவுள்ளனர்.

தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி தொடர்பான நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றின் ஊடாக இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய பத்தாம் தரத்தில் கல்வி பொதுத்தராதர பரீட்சையை நடத்துவதற்கு ஏதுவான வகையில் 6,7,8 மற்றும் 9ம் தரத்துக்கான பாடத்திட்டங்களை ஒழுங்கமைப்பது குறித்து இந்த நிபுணர் குழுவின் ஊடாக அவதானம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

Share This Article