கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைமீதான விவாதம் செப்ரெம்பரில்!

editor 2

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைமீதான விவாதம் செப்ரெம்பர்  முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே  இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி 45 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கையளித்தது.

தரமற்ற மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் வரவழைத்து சுகாதாரத்துறையை பலவீனப்படுத்தி நோயாளிகளின் உயிரிழப்புக்கு பங்களிப்பு செய்தமைக்காக சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ReplyForward
Share This Article