ஆறு மாதங்களில் 600 பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்றம்!

editor 2

அரசின் வரிக்கொள்கையால் கல்வி நிபுணர்கள் துறையைவிட்டு வெளியேறி வருகின்றனர் எனவும், இதுவரையான ஆறு மாத காலப் பகுதியில் மாத்திரம் 600 வரையான பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் 4 ஆயிரத்துக்கும் அதிக எண்ணிக்கையில் விரிவுரையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

“எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முதலாவது வரி மறுசீரமைப்பு நடவடிக்கை முடிவடைகின்றது. இதன்போது, அரசு தனது வரிக்கொள்கையைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க நேரிடும்” – என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Share This Article