யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில் வர்த்தக நிலைய உரிமையாளர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
மூவரடங்கிய வன்முறை கும்பல் ஒன்று இரவு கடைக்குள் புகுந்து கண்ணாடி அலுமாரி , சோடா போத்தல்கள் என்பவற்றை அடித்து நொறுக்கியதோடு உரிமையாளர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
உரிமையாளருக்கும், அவரது சகோதரருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.