யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இரண்டு குழுக்கள் நேற்றிரவுமோதலில் ஈடுபட்டன. இதனால், அங்கு பதற்ற நிலைநீடித்தது.
இந்த மோதல் குறித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ். சுதர்சனுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அத்துடன்,பொலிஸாரின் பாதுகாப்பும் தொடர்கிறது.
இதனிடையே, வீதிகளில் பயணிக்கமுடியாதவாறு போத்தல்கள் உடைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டது.
மோதலுக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவரவில்லை.