உடலில் நீர்சத்து குறைந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். நம் உடலில் முக்கால் வாசி தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடலில் இருந்தால் தான் நம் உடல் நன்றாக செயல்படும். முகம் வசீகரமாக இருக்க வேண்டும் என்றாலும் அதற்கு தண்ணீர் முக்கியம். இளமையாக நாம் காணப்பட வேண்டும் என்றாலும் உடலுக்கு தண்ணீர் அவசியம்.
ஆனால் நம்மில் பலரும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. அலுவலகம் செல்பவர்கள் பெரும்பாலும் சாப்பிடும் நேரங்களில் மட்டும் தான் தண்ணீர் பருகுகின்றனர். அது மிகவும் தவறு உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காவிட்டால் உடலில் உள்ள செல்கள் எளிதில் இருக்கக்கூடும். புதிய செல் உருவாவதில் தாமதம் ஏற்படும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீரின் தன்மைக்கும் அளிக்க வேண்டும். நீரை கொதி நிலைக்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும். நீரின்றி அமையாதது உலகு மட்டுமல்ல, உடலும்தான். தினம்தோறும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து, இங்கு பார்ப்போம்.
மேலும் தண்ணீர் அளவு சரியாக இருந்தால் தான் உடலில் ரத்த ஓட்டம் கூட சரியாக இருக்கும். மேலும் தண்ணீர் அளவு குறைந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும். குறைந்த அளவு நீரைக் குடிப்பவர்களுக்கு, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
சிறுநீரக பாதையில் கற்கள் உண்டாகி அறுவை சிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும்கூட, மீண்டும் சிறுநீரக பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு செய்ய எப்போதும் குடிப்பதை விட இரண்டு மடங்கு நீர் அதிகமாக குடிக்க வேண்டும். அப்போதான் இந்த பிரச்சனை சரியாகும்.
தண்ணீர் அளவு குறைவதால் பெரும்பாலும் கால் வீக்கம், தோல் வெடிப்பு, தோல் வறண்டுபோதல் போன்றவை ஏற்படும். இதற்கு மாறாக இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகச் செயல் இழப்பு பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக்கூடாது.
மேலும் இயற்கையாக நமது உடலின் நீர் அளவு குறையும் போது மனித மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் செயல்பட்டு நமக்கு தாகம் எடுக்கிறது. இதன் காரணமாகவே நாம் நீர் அருந்துகின்றோம்.
03 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது இதனால் இந்த வயதில் உள்ளவர்கள் பெரும்பாலும் குறைந்தளவு நீரே குடிப்பர்.
என்னடா இது நீர் குடித்த்தாலும் பிரச்னை குடிக்காவிட்டால் பிரச்சனை என்று யோசிக்கிறீர்களா? நீரானது வண்டி ஓடுவதற்கு ஊற்றும் பெட்ரோல் போன்றது. இது இல்லாவிட்டால் நம் வண்டி அதாவது உடல் செயல்படாது. நம் உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கும். அதே நேரத்தில் தேவைக்கு அதிகமான நீரும் ஆபத்தை உண்டாகும்.
நீர் சாது அதிகமாக இருக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளை விட குறைவாக இருந்தால் தான் அதிகமாக உடல் கோளாறு ஏற்படுகிறது. அதனால் வெயிலோ மழையோ நம் உடலுக்கு தேவையான அளவு நீர் பருகுவது சிறந்தது.